அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கப்பூகனார் வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை(04) இரவு 06.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்தில் படுகாயமடைந்த இரு இளைஞர்களும் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு
மேலதிக சிகிச்சைகளுக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த திருக்கோவில் பொலிஸார், இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment