5 Sept 2015

கசிப்புடன் மூவர் கைது

SHARE
திருகோணமலை, சம்பூர் பிரதேசத்தில் சட்டவிரோத கசிப்பு வைத்திருந்த  மூவரை நேற்று (04) கைது செய்துள்ளதாக சம்பூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.கே. சவாஹிர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தோப்பூர், சின்னக் குளம், பள்ளிக் குடியிருப்பைச் சேர்ந்த ரவீந்திரன்  குமார் என்பவரிடம் இருந்து 1,500 மில்லி லீற்றரும் தோப்பூர் நல்லூரைச் சேர்ந்த
இராமலிங்கம் கணேசன் என்பவரிடம் இருந்து 750 மில்லி லீற்றரும் தோப்பூர் இந்திக்குளம், பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த குமார் யோகராஜா என்பவரி;டம் இருந்து 1,500 மில்லி லீற்றரும் கைப்பட்டப்பட்டுள்ளது.

இவர்கள் எதிர்வரும் வியாழக்கிழமை மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். சம்பூர் பொலிஸ் நிலையப் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் போதைப் பொருள் பாவனையை முழுமையாக ஒழித்து போதைப் பொருள் அற்ற சமூகம் ஒன்றை உருவாக்கும் செயற்றிட்டத்தின் கீழ், நேற்று சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். 
SHARE

Author: verified_user

0 Comments: