9 Sept 2015

கிழக்கு முதலமைச்சர் மட்டக்களப்பு மாவட்ட அரச திணைக்களங்களுக்கு விஜயம்

SHARE
உள்ளூராட்சி வாரத்தையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து அரச நிறுவனங்களுக்கும் திணைக்களங்களுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் நேரில் விஜயம் செய்து வருகின்றார்.
அரச காரியாலங்களின் வேலைத்திட்டங்களின் குறைபாடுகள், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஆகியவற்றை நேரில் கண்டறியும் நிகழ்ச்சி நிரலின் முதற்கட்டமாக இன்று ஏறாவூர் நகர சபை, மட்டக்களப்பு மாநகர சபை, ஆரயம்பதி பிரதேச சபை ஆகியவற்றுக்கு விஜயம் மேற்கொண்டார்.
இது போன்று நாளை, நாளை மறுதினம் மற்றும் அடுத்த நாள் வரை சகல மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபைகள்,கல்வித் திணைக்களம்,போக்குவரத்து அதிகார சபை,கிராமிய அபிவிருத்தி சபை, கைத்தொழில் திணைக்களம், சுகாதார திணைக்களம், கட்டடத் திணைக்களம் போன்றவற்றுக்கு அவர் தொடர்ந்து 4 தினங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இதன்போது, ஆளணிப் பற்றாக்குறை சம்மந்தமாகவும் ஆட்களை நியமிப்பது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
இன்றைய விஜயத்தின்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கருணாகரன், ஆரிப்சம்சுதீன் மற்றும் முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.சலீம் முதலமைச்சின் காரியாலய அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
SHARE

Author: verified_user

0 Comments: