25 Sept 2015

ஒரு சிலரின் சில்லறைத்தனமான செயற்படுகளும்தான் எமது கட்சிக்கு மேலும் ஒரு ஆசனம் வருவருவதற்குத் தடைக்கல்லாக இருந்துள்ளன

SHARE
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மாற்றுக் கட்சிகளினால் எம்மீது தொடுக்கப்பட்ட விமர்சனங்களைவிட எமது கட்சிக்குள்ளேயிருந்து வந்த விமர்சனங்களுகு நாம் பதில் கொடுக்க வேண்டியிருந்தது. எமக்கு வாக்களிக்க வேண்டாம் என ஆயிரக்கணக்கான துண்முப்பிரசுரங்களையும், அச்சிட்டு வெளியிட்டார்கள்,  இவைகளுக்கு அப்பால் எம்மை எமது மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்துள்ளார்கள்.
என்றால் மக்கள் தெழிவாகத்தான் இருந்திருக்கபின்றார்கள் என நினைக்கின்றேன். எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு என கூறிக்கொண்டு திரியும் ஒரு சிலரின் சில்லறைத்தனமான செயற்படுகளும்தான் எமது கட்சிக்கு மேலும் ஒரு ஆசனம் வருவருவதற்குத் தடைக்கல்லாக இருந்துள்ளன.

தமிழ் தேசியக் கூட்மைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை வரவேற்றும் நிகழ்வொன்று வியாழக்கிழமை (24) மாலை  4.30 மணியளவில் எருவில் மட்.கண்ணகி வித்தியால கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.  

இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்….

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் கடந்த 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வாக்களித்ததைவிட 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேத்தலில் இரண்டு மடங்காக வாக்களித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெற்றி பெறவைத்தமைக்காக எமது மக்களின் பாதங்களைத் தொட்டு வணங்கி தமிழ் தேசியக்கூட்டமைப்பு நன்றி கூறுகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு 8 வேட்பாளர்களின் உழைப்புத்தான் எங்கள் 3 பேரை நாடாளுமன்றம் அனுப்பியுள்ளார்கள் எனவே 8 வேட்பாளர்களுக்கும். நன்றி கூறவேண்டும். 

எமது மக்கள் யானைச்சின்னத்திற்கும், வெற்றிலைச் சின்னத்திற்கும் வாக்களித்திரா விட்டால் மேலும் ஒரு ஆசனத்தை எமது கட்சி பெற்றிருக்கும். 75 வீதமாகவுள்ள எமது மாவட்ட தமிழ் மக்களுக்கு 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப் பட்டுள்ளார்கள். எனவே எதிர் காலததில் எமது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டும். 

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மாற்றுக் கட்சிகளினால் எம்மீது தொடுக்கப்பட்ட விமர்சனங்களைவிட எமது கட்சிக்குள்ளேயிருந்து வந்த விமர்சனங்களுகு நாம் பதில் கொடுக்க வேண்டியிருந்தது. எமக்கு வாக்களிக்க வேண்டாம் என ஆயிரக்கணக்கான துண்முப்பிரசுரங்களையும், அச்சிட்டு வெளியிட்டார்கள்,  இவைகளுக்கு அப்பால் எம்மை எமது மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்துள்ளார்கள். என்றால் மக்கள் தெழிவாகத்தான் இருந்திருக்கபின்றார்கள் என நினைக்கின்றேன். எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு என கூறிக்கொண்டு திரியும் ஒரு சிலரின் சில்லறைத்தனமான செயற்படுகளும்தான் எமது கட்சிக்கு மேலும் ஒரு அசனம் வருவருவதற்குத் தடைக்கல்லாக இருந்துள்ளன. 

எனவே தமிழ் தேசியக்கூட்டமைப்பு என கூறிக்கொண்டு திரியும் இவ்வாறானவர்கள் அவர்களது செயற்பாடுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும். 
என்னை ஆயுதக்குழு உறுப்பினர் என விமர்சனம் செய்தார்கள், நான் பென், மாக்கர் போன்றவற்றைத்தான்  தூக்கியிருக்கின்றேன், துவக்குத் தூக்கவில்லை நான் சாரணர் இயக்கத்தில் மாத்திரம்மான் இருந்துள்ளளேன், போராட்ட இயக்கங்களில் இருக்கவில்லை. இந்த விமர்சனங்களையெல்லாம் எமது மக்கள் புரிந்து கொண்டு சரியான முறையில் வாக்களித்துள்ளார்கள். 

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு 3 மாவட்டங்களில் மாவட்ட அபிவிருத்திக்கு ழுத்தலைவர் பதவி கிடைக்கவிருக்கின்றது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குத்தான் கிடைக்கவிருக்கின்றது. தெரிவு செய்யப்பட்ட 3 எமது உறுப்பினர்களில் சீ.யோகேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர்தான் எம்முள் சீரேஸ்ட்ட உறுப்பிராவார். நாங்கள் புதியவர்கள் சிரேஸ்ட்ட உறுப்பினராகவிருக்கின்ற சீ.யோகேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினருக்குத்தான் பலத்த அனுபவம் உள்ளது. அவரது சேவை மாவட்ட அபிவிருத்திக்குத் தேவை.

எனவே தற்போதைய அரசினால் முன்நெடுக்கப்படுகின்ற நல்லாட்சியித் தத்தவங்கள் எமது மக்களுக்கு இன்னும் மென்மேலும் கிடைக்க வேண்டியுள்ளது. சிங்கள மக்கள் அனுபவிக்கின்ற அனைத்து உரிமைகளயும் எமது மக்கள் அனுபவிக்க வேண்டும். இலங்கையில் இரண்டாம், மூன்றாம் என்ற இனங்கள் இல்லை அனைவரும் சமத்துவமானவர்கள்தான். 

மஹிந்த ராஜபக்ச அரசில் இருந்து ஊழல் செய்த பலர் மைத்திரி அரசுடன் இணைந்து தேசிய அரசாங்கம் என்ற போர்வையில், இனவாதம் கக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையிலதான் 19 வது எதிர்க்கட்சித் தலைவராக எமது தலைவர் இரா.சம்மந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவ்வாறான செயற்பாடுகளுக்கு மத்தியில்தான்   தமிழ் தேசியக் கூடுட்மைப்பின் அரசியல் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. என அவர் இவ்வாறு தெரிவித்தார

SHARE

Author: verified_user

0 Comments: