மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் பிரதேசத்தை சேர்ந்த இளையதம்பி வைரமுத்து (வயது 62) என்பவர் பாம்புக்கு கடிக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (01) மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவரது வீட்டுத் தோட்டத்திலேயே இவர் பாம்புக் கடிக்குள்ளானதாகவும் இதனைத் தொடர்ந்து விஷகடி வைத்தியரிடம் இவர் சிகிச்சை பெற்றுவந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
0 Comments:
Post a Comment