(க.விஜயரெத்தினம்)
மகாவலி மற்றும் சுற்றாடல் அமைச்சின் கீழ் இயங்கும் கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவளங்கல் திணைக்களத்தினால் நடைமுறைப் படுத்தப்படும் கரையோர வலய முகாமைத்துவ திட்டத்தின் மூலம் மட்டக்களப்பு வாவியின் எல்லையிடல் சம்பந்தமான கருத்தரங்கு களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிரமா சேவக உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை (04) களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் எம்.கோபலரெத்தினம் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவளங்கல் திணைக்களத்தின், மாவட்ட செயற்றிட்ட, இணைப்பாளர் எ.கோகுலதீபன் கலந்து கொண்டு விளக்கங்களை, வளங்கினார்.
எல்லைப் பிரச்சனை மட்டக்களப்பு வாவியின் சுற்றாடல் நிலைமை கரையோரம் பேணல், கரையோர முகாமைத்துவம், கண்டல் தாவரங்கள், கண்டல் சூழல் விடயங்கள், கண்டல் சூழல் விலங்கினங்களை பாதுகாத்தல், கண்டல் சமூகத்தை பாதுகாத்தல், போன்ற பல விடயங்கள் தெளிவாக இதன்போது ஆராயப்பட்டன.
மட்டக்களப்பு வாவியின் எல்லைப் பிரச்சனைக்கு இதன் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என செயற்றிட்ட இணைப்பாளர் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் உதவியின் மூலம் பிரதேச செயலாளர்களின், உதவியுடனும் இச்செயற்றிட்டம், முன்னெடுக்கப் படுகின்றது.
இதற்கான நிதியினை விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியமும் (IFAD) உலக சுற்றாடல் நிதியத்தின் 33 மில்லியன் ரூபா நிதியில் 320Km வாவி எல்லைப்படுத்தபடவுள்ளது.
0 Comments:
Post a Comment