4 Sept 2015

தனியார் கல்வி நிலையம் இனந்தெரியாத நபர்களினால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது

SHARE
களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையமொன்று இனந்தெரியாத நபர்களினால் வியாழக்கிழமை மாலை (03) உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்

களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் அமைந்துள்ள ஒக்ஸ்போட் கொலிஜ் எனும் தனியார் கல்வி நிலையமே இவ்வாறு  சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொர்பாக கல்வி நிலையத்தின் உரிமையாளர் நா. நித்தியானந்தராசா கருத்துத் தெரிவிக்கையில் :- மணவர்களின் நலன் கருதியே இந்த கல்வி நிலையத்தினை நான் மிகவும் சிறப்பாக முன்னெடுத்து வந்தேன், இதை பொறுக்க முடியாத தீய சக்திகளே இதனை மேற் கொண்டிருக்க வேண்டும். இதனால் பாதிக்கப்படுவது மாணவர் மாத்திரமே இதனை நான் பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளேன். இச் சம்பவத்துடன் தொடர்புடைய சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு பொலிசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

களுவாஞ்சிகு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் இச் சம்பவம் தொர்பாக வினாவியபோது சம்மந்தப்பட்டவர்களை கண்டறிவதற்கான உயர்மட்ட விசாரணை இடம் பெறுவதாக தெரிவித்தார். 






SHARE

Author: verified_user

0 Comments: