2 Sept 2015

போரதீவுப்பற்று பிரதேச சபையால் நாளாந்தம் 32000 லீற்றர் குடிநீர் வினியோகம்

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவு பற்றுப் பிரதேசத்தில் தற்போது அதிக வரட்சி நிலவி வருகின்ற காரணத்தினால் அப்பகுதிவாழ் பொதுமக்களிடையே குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
அப்பகுதி மக்களின் குடிநீர்த்தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு எமது பிரதேச சைபயால் நாளாந்தம் 11 கிராமங்களில் 32000 லீற்றர் குடிநீர் வழங்கி வருகின்றோம். என போரதீவுப்பற்று பிரதேச சபையின் செயலாளர் எஸ்.குபேரன் தெரிவித்தார்.

போரதீவுப்பற்று பிரதேச சபையால் வரட்சிக்காக வேண்டி முன்னெடுக்கும் செயற்பாடுகள் தொடர்பில் செவ்வாக் கிழமை (01) தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

எமது பிரதேச எல்லைக்குட்பட்ட கிராமப் புறங்களில் தற்போது அதிக வரட்சி நிலவி வருவதை அவதானிக்க முடிகின்றது. இவற்றால் மக்கள் மத்தியில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இவற்றைக் கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு நாளாந்தம், 32000 லீற்றர் குடி நீரும், இவற்றினைவிட பாடசாலைகள், பிரதேச செயலகம், சுகாதார நிலையங்கள், போன்றவற்றிற்கும் வாராந்தம் 7000 லீற்றர் குடிநீரும் வழங்கி வருகின்றோம்.

இருந்த போதிலும் தற்போதைய நிலையில் எமது பிரதேசத்திலுள்ள ஏனைய கிராமங்களைச் சேர்ந்த மக்களும், குடிநீர் வழங்குமாறு கோரிக்கைகள்,  அதிகரித்து வருகின்றன, எதிர் வரும் வாரங்களில் தற்போது வழங்கிவரும் குடிநீரைவிட அதிகளவு குடிநீர் வழங்க வேண்டிவரும், எனவும், அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: