தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வொன்று இன்று ஞாயிற்றுக் கிழமை (20) கோட்டைக்கல்லாற்றில் நடைபெற்றது.
கோட்டைக்கல்லாற்றைச் சேர்ந்த க.பாக்கியராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ச.வியாளேந்திரன், ஞா.சிறிநேசன், மற்றும், கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சர் கி.துரைராசசிங்கம், மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராச உட்பட பொதுமக்கள் பலரும் கலநது கொண்டிருந்தனர்.
இதன்போது கோட்டைக்கல்லாறு அம்பாறைவில் பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடு இடம்பெற்று பின்னர் பிரதான வீதிவழியாக வரவழைக்கப் பட்டனர்.
இம்முறை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகளின்படி மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தேர்தல் தொகுதியிலிருந்து எந்த விதநாடாளுமன்ற உறுப்பினரும் தெரிவு செய்யப்படவில்லை. இந்நிலையில் தெரிவு செய்யப்பட்டள்ள ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் சேவைகள் அதிகளவு பட்டிருப்புத் தொகுதியின்பால் ஈர்க்கப்படல் வேண்டும் என இ நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கலந்து கொண்ட பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
0 Comments:
Post a Comment