மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை நடாத்தும் வெருகலம்பதி சித்திரவேலாயுத சுவாமி ஆலய மஹோற்சவ ஆன்மீக பாதயாத்திரை நாளை சனிக்கிழமை (26) மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகவுள்ளது.
மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களின் எல்லையாக இருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு சனிக்கிழமை (26) காலை மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி 2015.10.01ம் திகதி அன்று பிற்பகல் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தை சென்றடையவுள்ளது.
சனிக்கிழமை காலை மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் ஆரம்பமாகி குறுமன்வெளி விநாயகர் ஆலயம், குருமன்வெளி நாகதம்பிரான் ஆலயம், எருவில் அம்மன் ஆலயம், எருவில் ஐயனார் ஆலயம், பட்டிருப்பு பிள்ளையார் ஆலயம், களுவாஞ்சிக்குடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயம், களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயம், தேத்தாத்தீவு சித்தி விநாயகர் ஆலயம், மாங்காடு பிள்ளையார் ஆலயம், செட்டிபாளையம் பிள்ளையார் ஆலயம், முருகன் ஆலயம், குருக்கள்மடம் செல்லக் கதிர்காமர் ஆலயம், குருக்கள்மடம் ஐயனார் ஆலயம், கிரான்குளம் சித்தி விநாயகர் ஆலயம் தரிசனங்களும்,
ஞாயிற்றுக்கிழமை காலை கிரான்குளம் மகா விஷ்ணு ஆலயத்தில் ஆரம்பமாகி புதுக்குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலயம், தாளங்குடா விநாயகர் ஆலயம், தாளங்குடா சரீரம் விஷ்ணு ஆலயம், ஆரையம்பதி சிவன் ஆலயம், ஆரையம்பதி திருநீலகண்ட பிள்ளையார் ஆலயம், நாவற்குடா மாரியம்மன் ஆலயம், நாவற்குடா விஸ்ணு ஆலயம், கல்லடி பேச்சியம்மன் பிள்ளையார் ஆலயம், கல்லடி முருகன் ஆலயம், கல்லடி பிள்ளையார் ஆலயம், கீரிமடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், மாமாங்கம் மாமாங்கேஸ்வரர் ஆலயம், மாமாங்கம் மாரியம்மன் ஆலயம், பெரியஊரணி பத்திரகாளியம்மன் ஆலயம், கொத்துக்குளம் மாரியம்மன் ஆலயம், பிள்ளையாரடி விநாயகர் ஆலயம், மயிலம்பாவெளி ஸ்ரீ முருகன் ஆலயம், மயிலம்பாவெளி சித்தி விநாயகர்; ஆலயம் தரிசனமும்,
திங்கட்கிழமை காலை ஆறுமுகத்தான் குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆரம்பமாகி ஏறாவூர் பிள்ளையார் ஆலயம், ஏறாவூர் கருமாரியம்மன் ஆலயம், வெள்ளிமலைப் பிள்ளையார் ஆலயம், ரமேஷ்புரம் சித்திரவேலாயுதர் ஆலயம், சிவதொண்டர் நிலையம், கொம்மாதுறை தேவி கோயில், கொம்மாதுறை பிள்ளையார் ஆலயம், வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலயம், மருங்கையடிப் பிள்ளையார் ஆலயம், சித்தாண்டி சந்திப் பிள்ளையார் ஆலயம், சித்தாண்டி சித்திரவேலாயுதர் ஆலயம், முறக்கொட்டான்சேனை மகமாரியம்மன் ஆலயம், முறக்கொட்டான்சேனை விஷ்ணு ஆலயம், சந்திவெளி புதுப்பிள்ளையார் ஆலயம், கோரகல்லிமடு சித்தி விநாயகர் ஆலயம், கிரான் சித்தி விநாயகர் ஆலயம், கிரான் அம்மன் ஆலயம், கும்புறுமூலை முனீஸ்வரர் ஆலயம், கறுவாக்கேணி முத்துமாரியம்மன் ஆலயம், பெற்றோல் நிலைய பிள்ளையார் ஆலயம், வைத்தியசாலை சித்தி விநாயகர் ஆலயம், வாழைச்சேனை புதுக்குடியிருப்பு பத்திரகாளியம்மன் ஆலய தரிசனமும்,
செவ்வாய்கிழமை காலை வாழைச்சேனை பேச்சியம்மன் ஆலயத்தில் ஆரம்பமாகி வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலயம், மயிலங்கரச்சை மாரியம்மன் ஆலயம், வட்டவான் சித்தி விநாயகர் ஆலயம், காயான்கேணி விஸ்ணு ஆலயம், மாங்கேணி செல்வ விநாயகர் ஆலய வழிபாடுகளும்,
புதன்கிழமை காலை மாவடிஓடை விஷ்ணு ஆலயத்தில் ஆரம்பமாகி, பனிச்சங்கேணி முருகன் ஆலயம், வாகரை வைத்தியசாலை பிள்ளையார் ஆலயம், வாகரை செல்வ விநாயகர் ஆலயம், வாகரை சிவமுத்துமாரியம்மன் ஆலய வழிபாடும்,
வியாழக்கிழமை காலை கண்டலடி பத்திரகாளியம்மன் ஆலயத்தில் ஆரம்பமாகி அம்பந்தனாவெளி பிள்ளையார் ஆலயம், பால்சேனை பிள்ளையார் ஆலயம், பால்சேனை நாகதம்பிரான் ஆலயம், புச்சாக்கேணி செந்தூர் முருகன் ஆலயம், கதிரவெளி வைத்தியசாலை பிள்ளையார் ஆலயம், கதிரவெளி வீரகத்திப் பிள்ளையார் ஆலயம் பத்திரகாளி அம்மன் ஆலயம் கதிரவெளி, பிற்பகல் வேளை வெருகல் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தை சென்றடைந்து பாதயாத்திரை முடிவுபெறவுள்ளாக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை இன்று வெள்ளிக்கிழமை (25) காலை அறிவித்துள்ளது.
இப்பாதையாத்திரை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ளது. யாத்திரையில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் உணவுகள் வழங்கப்படும். எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment