21 Sept 2015

கல்முனையில் கரையோரம் பேனல் பாதுகாப்பு வேலைத்திட்டம்

SHARE
கரையோரம் பேனல் பாதுகாப்பு வேலைத்திட்டம் நாளை (22) அம்பாரை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் ‘கடற்கரையை சுத்தமாக வைத்திருப்போம்’ கரையோரம் பேனல் பாதுகாப்பு வேலைத்திட்டம கடந்த 19 ம் திகதி முதல் ஒரு வார காலம் செயற்படுத்தப்படவுள்ளது.

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித்த பி வனசிங்க தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வு பெரியநீலாவணை, பாண்டிருப்பு, கல்முனை, சாய்ந்தமருது போன்ற பிரதேசங்களில் காலை 9.00 மணிமுதல் பொது மக்களின் பங்களிப்போடு நடைபெறவுள்ளது. நிகழ்வுளில் மக்கள் பிரதிநிதிகள், பிரதேச செயலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகௌ;ளவுள்ளனர்.


SHARE

Author: verified_user

0 Comments: