21 Sept 2015

ஐக்கிய தேசிய கட்சி மாநகர சபை உறுப்பினர் முஸ்லிம் காங்கிரஸின் பக்கம்

SHARE
கல்முனை மாநகர சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஏ.எச்.எச்.எம்.நபார் முஸ்லிம் காங்கிரஸில் இணைவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவபேரவைத் தலைவராக செயற்பட்ட இவர் கல்முனை மாநகர சபை உறுப்பினரும், ஐக்கிய தேசிய கட்சியின் கல்முனை வடக்கு-மேற்கு இனைப்பாளரும்,அம்பாறை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் இளைஞர் அமைப்பாளருமாவார். கடந்த மாநகரசபை தேர்தலில் ஐ.தே.கட்சியில் போட்டியிட்டு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

நற்பிட்டிமுனை கிராமத்தை பிறப்பிடமாக கொண்ட இவர் இளவயதிலிருந்தே அரசியலின் பக்கம் ஈர்க்கப்பட்டார். நற்பிட்டிமுனை கிராமத்தில் இளைஞர் அமைப்பை உருவாக்கி சிறந்த சமூகசேவைகளை
செய்துவருகின்றார்.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருடனான சந்திப்பு ஒருசில தினங்களில் இடம்பெறவுள்ளதாகவும் அதன்பின்னர் தனது உத்தியோகபூர்வ அறிக்கை வெளிவரவுள்ளதாகவும் அறியமுடிகின்றது.


SHARE

Author: verified_user

0 Comments: