மட்டக்களப்பு மாவட்டம் செட்டிபாளையம் பிரதேச வைத்தியசசாலையில் புதிதாகக் கட்டப்பட்ட நோயாளர் விடுதி திறந்து வைக்கும் நிகழ்வு சனிக்கிழமை(19) மாலை நடைபெற்றது.
கிழக்கு மாகாணசபையின் 11 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் இந்நோயாளர் விடுதி கட்டப்பட்டுள்ளது.
இவ்வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ரி.மிருனாளன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் பிரதம அதிதயாகக் கலந்து கொண்டு விடுதியைத் திறந்து வைத்தார்.
0 Comments:
Post a Comment