மட்டக்களப்பு - தாளங்குடா கல்வியற் கல்லூரியிலிருந்து 25 ஆசிரிய மாணவர்கள் தீடிர், சுகயீனம் காரணமாக இன்று சனிக்கிழமை (19) மாலை 6.10 மணியளவில், ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை வட்டாரங்கள், தெரிவிக்கின்றன.
இவ்வாறு அனுமதிக்கப் பட்டவர்களுக்கு தீடீர் காய்ச்சல், வாந்தி, வயிற்றோட்டம் போன்ற நோய்கள், காணப்படுவதாகவும், இவர்கள் அனைவரும் இன்று சனிக்கிழமை மதியம் உணவருந்தியுள்ளனர், இருந்த போதிலும் இரவு உணவு அருந்துவதற்கு முன்னர் இந்நோய் இவர்களிடம் தென்பட்டதால் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டள்ளனர். எனவும் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 Comments:
Post a Comment