மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற இரு வேறு விபத்துகளில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு கண்ணகியம்மன் ஆலயத்திற்கு முன்பாக வேகமாக வந்த கார் மோதியதன் காரணமாக சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துவிச்சக்கர வண்டியில் குறித்த சிறுவன் சென்றுகொண்டிருந்தபோது வேகமாக வந்த கார் துவிச்சக்கர வண்டியில் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது துவிச்சக்கர வண்டி கடும்சேதமடைந்துள்ளதுடன் சிறுவனும் படுகாயமடைந்த நிலையில் ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணையை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
இதேவேளை மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
0 Comments:
Post a Comment