19 Aug 2015

தமிழ் மக்களின் நலனுக்காக பாடுபடுவேன்-கோடீஸ்வரன்

SHARE

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் கீழ் தமிழ் மக்களின் நலனுக்காக தான் பாடுபடவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு  விருப்பு வாக்குகளுடன் தெரிவுசெய்யப்பட்ட  அரியநாயகம் கவீந்திரன் கோடீஸ்வரன் (ரொபின்) தெரிவித்தார்.
அக்கரைப்பற்றிலுள்ள அவரது இல்லத்தில்  புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
  
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'எனது வெற்றி தனிப்பட்ட வெற்றி அல்ல. அம்பாறை மாவட்டத்தில் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வெற்றி என்பதுடன், எனது சக வேட்பாளர்களினதும் கூட்டு வெற்றி ஆகும்.

வாக்களித்த மக்களுக்கும் அதேபோல் எனக்கு வாக்களித்து வெற்றி பெறவைத்த மக்களுக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.'  என்றார். மேலும், எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு சிறந்த உண்மையான, நேர்மையான தலைமைத்துவத்தை வழங்குவேன்.  இன, மத வேறுபாடின்றி அனைத்து மக்களையும் அரவணைத்து பக்கச்சார்பின்றி செயலாற்றுவேன். அம்பாறை மாவட்ட மக்களுக்கு அபிவிருத்தியை  பெற்றுக்கொடுக்க முயற்சிப்பேன்' எனவும் அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: