19 Aug 2015

சரத் வீரசேகர தோல்வியடைந்துள்ளார்

SHARE
ஐ.ம.சு.முன்னணி சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் பிரதியமைச்சர் சரத் வீரசேகர, நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.

 இலங்கை கடற்படையில் ரியர் அட்மிரல் பதவி வகித்த இவர், அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்றதையடுத்து, 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், ஐ.ம.சு.முன்னணியினூடாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அந்தத் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட அனைத்து கட்சி வேட்பாளர்களை விடவும் 54,373 எனும் அதிகூடிய விருப்பு வாக்குகளை இவர் பெற்றமை குறிப்பிடத்தக்கது. ஆயினும், இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில், சரத் வீரசேகர தோல்வியடைந்துள்ளார்.

2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், ஐ.ம.சு.முன்னணி சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு, முதலாவது அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற சரத் வீரசேகர மற்றும் இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்ட ஏ.எல்.எம். அதாவுல்லா ஆகியோர் இம்முறை தோல்வியை தழுவியுள்ள நிலையில், அந்தத் தேர்தலில் மூன்றாவது அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற சிறியானி விஜேவிக்கிரம, இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயாகும்.   
SHARE

Author: verified_user

0 Comments: