7 Aug 2015

விழிப்புலனற்றோருக்கான பயிற்சி நிலையம்

SHARE

கிழக்கிலங்கையில் Green Flowers Sri lanka விழிப்புலனற்றோர் அமைப்பினால் அக்கரைப்பற்று மாநகரில் பார்வையற்ற மாணவர்களுக்கான பயிற்சி நிலையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 



முழு நேர பயிற்சியினை வழங்கும் இந் நிலையமானது ஒரு வருட காலத்துக்குள் முற்றிலும் இலவசமாக பயிற்சிகளை வழங்கி கண் பார்வையற்ற மாணவர்களை சாதாரண மாணவர்களின் சம நிலைக்குத் தரமுயர்த்தி தத்தமது பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உள்ளது.




இப் பயிற்சி நிலையத்தில் 




• குற்றெழுத்து 
• கணணி 
• விளையாட்டு 
• சுய நடமாட்டத்துக்கான பயிற்சிகள் மற்றும் இன்னோரன்ன பல பயிற்சிகளையும் வழங்கவுள்ளது. 




இதற்காக நாடளாவிய ரீதியில் விண்ணப்பங்களை கோருகின்றது. எனவே உங்களது பிரதேசங்களில் 5-15 வயது வரையான கண் பார்வையற்ற மாணவர்கள் அவர்களின் சுய விபாரங்கள் அடங்கிய விண்ணப்பபடிவம் ஒன்றை பூர்த்தி செய்து 30.08.2015ற்கு முன்னர் அனுப்பலாம். 




அனுப்பி வைக்க வேண்டிய முகவரி, 62/B, 5th cross street, sammanthurai-11
SHARE

Author: verified_user

0 Comments: