7 Aug 2015

ரணிலுக்கு நஞ்சு குப்பியை காட்டியது குற்றமாகும்

SHARE

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டிலே மிகவும் கௌரவமான அரசியல் தலைவர், கனவான், அரசியல்வாதி அவரை நஞ்சு குப்பியைக்காட்டி முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா மிரட்டிய சம்பவம் இந்த நாட்டு அரசியல் வரலாற்றில் கறை படிந்த அத்தியாயமாகுமென கிழக்கு மாகாண சட்டத்துறை வல்லுனர்களும் புத்தி ஜீவிகளும் கருத்து வெளியிட்டுள்ளனர். 

இது தொடர்பாக சட்டத்தரணி ஏ.ஏ.றூபி முன்னாள் பிரதி கல்வி பணிப்பாளர் எஸ்.மாசிலாமணி ஓய்வுபெற்ற சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.சிவப்பிரகாசம் ஆகியோர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர். 

மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறானவர்களைத்தான் அரசியலில் வளர்த்து விட்டிருக்கிறார் என்பது இதனூடாக புலப்படுகின்றது. 

ஒரு கொலை செய்யப் போவதாக மிரட்டுவதற்கு இது சமனானதாகும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். 
SHARE

Author: verified_user

0 Comments: