மட்டக்களப்பு, வாழைச்சேனை கோழிக்கடை வீதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கல் வீச்சில் காயமடைந்த ஆதரவாளர் ஒருவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலியை ஆதரித்து புதன்கிழமை (05) இரவு கூட்டம் நடைபெற்றது.
இதன்போது, அமீர் அலியின் வாகனத்தை இலக்குவைத்து அமீர் அலிக்கு எதிராக செயற்படுபவர்களினால் வீசப்பட்ட கல் வாகனத்துக்கு அருகிலிருந்த தனது தலையில் பட்டு காயம் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட நபர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment