மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்றுப் பிரதேசத்திலுள்ள காக்காச்சுவட்டை – சின்னவத்தை பிரதான வீதி மிக நீண்ட காலமாக குன்றும் குழியுமாகக் காணப்படுவதனால் அவ்வீதியைப் பயன்படுத்தி வரும் பல நூற்றுக் காணக்கானோர் பலத்த சிரமத்தை எதிர் கொண்டு வருவதாக அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இவ்வீதியைப் பயன்படுத்தி, காக்காச்சுவட்டை, பலாச்சோலை, சின்னவத்தை, ஆனைகட்டியவெளி, றாமணடு, போன்ற கிராமங்களுக்குச் செல்லும் மக்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியிலே பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே இவ்வீதியை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் துரிதகதியில் புணரமைப்புச் செய்துதர வேண்டும் என அப்பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
0 Comments:
Post a Comment