கிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளிலும் மாணவர்களுக்கு மத்தியில் இன நல்லுறவை கட்டியெழுப்புவதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல அர்ப்பணிப்புடன் செயலாளற்ற வேண்டும் என்று முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாடசாலைகளின் பெளதீக அபிவிருத்தி சம்பந்தமாக முதலமைச்சர் அலுவலகத்தில் நடாத்தப்பட்ட கலந்துரையாடலின் போது அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
இந்த கலந்துரையாடலின் போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர்,
கிழக்கு மாகாணம் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்கின்ற ஒரு மாகாணம் என்பதோடு கிழக்கு மாகாணத்தில் தான் முதன் முதலாக மூவினங்களினையும் உள்ளடக்கியதான ஒரு கூட்டாட்சி ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. இம் மாகாணத்தின் அமைச்சரவையில் கூட மூவினத்தவர்களும் பிரதிநிதித்துவப்படுத்துவதும் கிழக்கு மாகாணத்தினுடைய சிறப்பான நிர்வாகத்திற்கு அமைச்சரவையினது பூரண ஆதரவு கிடைப்பதும் ஒரு காரணம்.
இன ரீதியான அதிகார துஷ்பிரயோகத்திற்கு கிழக்கு மாகாணத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இன ரீதியான அதிகார துஷ்பிரயோகத்திற்கு ஆளாகின்றவர்கள் அதுபற்றி நேரடியாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்து அதற்கான தீர்வினைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் முதலலமைச்சர் ஹாபிஸ் நஸீர் தெரிவித்துள்ளார்
0 Comments:
Post a Comment