மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அதிக வறட்சி காரணமாக 15000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக வவுனதீவு, வெல்லாவெளி, கொக்கட்டிசோலை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஏரிகள் மற்றும் குளங்கள் வறண்டுள்ளதோடு நீர்ப்பாசனத்தில் நீர் மட்டம் குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விலங்குகளுக்கு உணவு வழங்க முடியாத அளவுக்கு பாதிப்படைந்துள்ளதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெப்ப நிலை அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் கடலுக்கு செல்லும் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன
கடல் மீது மேற்பரப்பு வெப்பம் காணப்படுவதனால் மீன் பிடி நடவடிக்கை மேற்கொள்வதற்கும் கடினம் என தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments:
Post a Comment