மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஆலம்குளம் கிராமத்திலுள்ள அமெரிக்கன் சிலோன்மிஷன் திருச்சபையில் திருட்டுப்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாரந்த வழிபாட்டு நடவடிக்கைகளுடன் ஏனைய நாட்களில் முன்பள்ளி பாடசாலையாகவும் இந்த திருச்சபை இயங்கிவருகின்றது. இந்த நிலையில், முன்பள்ளிப் பாடசாலையின் விடுமுறை முடிந்து எதிர்வரும் 31ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்த திருச்சபையை சுத்தம் செய்வதற்கு முன்பள்ளி ஆசிரியர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை சென்றனர். இதன்போது, திருச்சபையின் கதவுப் பூட்டு உடைக்கப்பட்டு திருட்டு போயுள்ளதை அவதானித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment