28 Aug 2015

முன்னாள் அமைச்சர் அதாவுல்லா அக்கரைப்பற்றுக்கு வருகை! அரசியல் முடிவொன்றை அறிவிப்பார்?

SHARE

முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தனது ஆதரவாளர்களை சந்திப்பதற்காக இன்று மாலை அக்கரைப்பற்றுக்கு வருகை தந்துள்ளார்தேசிய காங்கிரஸ் கட்சித்தலைவரான அவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டுத் தோல்வியடைந்திருந்தார்.
அதன் பின்னர் கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் நியமனம் தனக்கு கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்திருந்தார். ஆனால் அது மட்டக்களப்பில் போட்டியிட்ட ஹிஸ்புல்லாஹ்விற்கு கிடைத்திருந்தது.
இந்நிலையில் மீண்டும் முஸ்லிம் காங்கிரசுடன் இணைவதா அல்லது றிசாத் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் இணைந்து எதிர்காலத் தேர்தல்களுக்கு முகம் கொடுப்பதா என்பது பற்றி தனது ஆதரவாளர்களுடன் கலந்துரையாட அவர் இன்று அக்கரைப்பற்றுக்கு வருகை தந்துள்ளார்.

அக்கரைப்பற்று அபிவிருத்தியின் நாயகன் என்றழைக்கப்படும் அதாவுல்லாஹ்வின் கோட்டையாக அப்பிரதேசம் இன்று வரை அடையாளப்படுத்தப்படுகின்றது. அதனை நிரூபிக்கும் வகையில் அதாவுல்லாஹ்வின் வருகையை எதிர்பார்த்து பெருமளவான ஆதரவாளர்கள் கடற்கரை மைதானத்தில் தற்போது குழுமியுள்ளனர்.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஹக்கீமை விடவும் ஒரு காலத்தில் மக்கள் செல்வாக்கு மிக்க அரசியல்வாதியாக திகழ்ந்த அதாவுல்லா, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதில் அக்கறையின்மை, சந்திக்க வரும் பொதுமக்களை அலைக்கழித்தல், பிரதேசவாதம் என்பவற்றால் தற்போது குறுநில அரசியல்வாதியாக செல்வாக்கிழந்து போயுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: