
மட்டக்களப்பு நகரிலுள்ள குளங்களில் இந்தியாவை சேர்ந்த இளைஞர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியாவிலிருந்து வந்து தொழில் நடவடிக்கைககளில் ஈடுபட்டுவருபவர்களே உணவுக்காகவும் விற்பனைக்காகவும் மீன்பிடியிலீடுபட்டு வருவதை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் அமைந்துள்ள குளத்தில் இன்று காலை இந்திய நாட்டின் பெங்களுரை சேர்ந்த இளைஞர்கள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தனர்.
விரால், குறட்டை, பனையான், கோல்டன், மற்றும் மீசைப்பனையான் உள்ளிட்ட குளத்து மீன்களை இவர்கள் பிடித்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
0 Comments:
Post a Comment