அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிலம் குடா சந்தியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
இன்று மாலை 4 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பொத்துவிலிலுள்ள திருமண வீடொன்று சென்று விட்டு, மோட்டார் சைக்கிளில் வந்த இவர்களை, கைதிகளை ஏற்றிச்செல்லும் வாகனம் மோதியுள்ளது.
கொழும்பு கொட்டஞ்சேனையைச் சேர்ந்த கருணாநிதி ஸ்டீபன் (வயது 18) என்பவரே சம்பவத்தில் பலியாகியுள்ளார்.
இவருடன் பயணித்த பரமலிங்கம் மதன் என்பவர் தற்போது திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்
0 Comments:
Post a Comment