
மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு சுயேட்சைக்குழுவாகப் போட்டியிட்ட நாம் திராவிடர் கட்சி கட்டுப்பணத்தினையும் இழந்து மாவட்டத்தில் மொத்தமாக 1134 வாக்குகளையே பெற்றுள்ளது.
இக் கட்சியில் செங்கலடியிலுள்ள திரையரங்க உரிமையாளர் கணபதிப்பிள்ளை மோகன், அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியில் இம்முறை தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி சுவர்ணராஜாவின் மனைவி அன்னல் அருந்ததி சுவர்ணராஜ், மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் கந்தசாமி தவராசா, நல்லதம்பி பிரதீபன், உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணைத்தின் தலைவராக இருந்த வர்ணகுலசிங்கம் கமலதாஸ், சிவகுமார் ரகுநாத், சிவநாதன் சந்திரன், எஸ்.எஸ்.ஆர் அமைப்பின் மட்டக்களப்பு கிளையைச் சேர்ந்த சிவலிங்கம் சுதர்சனன் ஆகியோர் போட்டியிட்டிருந்தனர்.
கணபதிப்பிள்ளை மோகன் கடந்த மாகாண சபைத் தேர்தலில் முன்னாள் கிழக்குமாகாண சபை முதலமைச்சர் சிசந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிட்டவர், அதனையடுத்து அக்கட்சியிலிருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டார். பின்னர் நாம் திராவிடர் என்ற புதிய கட்சியை அறிவித்தார். இக் கட்சியின் தலைவராக கணபதிப்பிள்ளை மோகன் செயற்படுகிறார்.
0 Comments:
Post a Comment