தமிழ்த் தேசிய கூட்டமைப்பினையும், தேசியத்தினையும் வலுப்படுத்துவதனூடாக, எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் தமிழர்களின் குரல் ஓங்கி ஒலிக்கச் செய்வது மக்களின் கடமை என தமிழத் தேசிய கூட்டமைப்பின் அப்பாறை மாவட்ட வேட்பாளர் கலையரசன் தெரிவித்துள்ளார்.அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேசத்தில் இன்று காலை த.தே.கூட்டமைப்பின் பெரும் தலைவர் இரா சம்பந்தன் தலைமையில் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து பேசிய அவர்,
வடக்கு கிழக்கில் பல இழப்புக்களை சந்தித்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த சூழலில் நமது தேசியத்தை பலப்படுத்துவதனூடாக நாங்கள் நிலையான சமாதானத்தை எதிர் காலத்தில் பெற முடியும் என்றார்.
இக்கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, உட்பட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்கள், கட்சி தொண்டர்கள், ஆதரவாளர்கள் மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment