
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் சர்வதேச அபிவிருத்திக்கான நிறுவனத்தினால் வழக்கப்பட்ட(யூ.எஸ்.ஏயிட்) நிதி உதவியுடன் கிழக்கு மகாண பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் தமிழ் பாடசாலைகள் புறக்கணிக்கப் பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்ளப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
மேற்படி திட்டத்தின் ஊடாக கிழக்கு மாகாண பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு பாடசாலைகளில் ஒரு பாடசாலை மாத்திரமே தமிழ் பாடசாலையாக உள்ளடக்கப் பட்டுள்ளது.
ஏனைய ஏழு பாடசாலைகளும் முஸ்லிம் பாடசாலைகள். இவ்விடயம் தெடர்பாக வியாழக் கிழமை மாலை (27) கருத்துத் தெரிவிக்கையிலையே அவர் இவ்வாறு தெ
ரிவித்தார்.
அவர் இவ் விடயம் சம்பந்தமாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்
குறித்த நிதியானது கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பேசும் மக்களுக்கான பாடசாலைகளுக்கு சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இதனை விடுத்து முதலமைச்சர் தன்னுடைய அதிகாரத்தினை பயன்படுத்தி 7 க்கு ஒன்று என்ற வீதத்தில் தேர்வு செய்துள்ளார். இந்த பாடசாலை தேர்வுகளை முதலமைச்சர் மேற் கொண்டுள்ளார். இதனை மீள்பரிசீலனை செய்து பின்தங்கிய தமிழ் பாடசாலைகளை இந்த பட்டியலில் சேர்த்துக் கொள்வதற்காக கல்வி அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உண்மையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள போரினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை இவ்வாறான விசேட திட்டங்களின் ஊடாக அபிவிருத்தி செய்வதற்கு சிறப்பான சந்தர்ப்பமாக இவற்றினை பயன்படுத்த வேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் எந்தவி அடிப்படை வசதிகள் இல்லாமல் கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் அதிகம், கணப்படுகின்றது அப் பாடசாலைகள் எந்தவித அபிவிருத்தியும் இன்றி அவ்வாறே கணப்படுகின்றது.
இனிவருங்கலங்களில் போரினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு கிழக்கு மாகாண சபை முனுரிமை வழங்கி, செயற்பட வேண்டும். இல்லா விட்டால் அப்பாடசாலைகள் மேலும் மிகமோசமாக பின்தங்கி செல்லும் நிலை ஏற்படும். விசேடமாக கிழக்கு மாகாண முதலமைச்சர் இவற்றில் கரிசினை கொண்டு பக்கச்சார்பின்றி செயற்படவேண்டும் எனக் கேட்டுக் கொள்வததாக அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment