
நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகலமைப்பு அமைச்சினால் மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுகாதார மேம்பாட்டு செயற்திட்டம் (மலசலகூடம் அமைத்தல்) தொடர்பான ஆரம்ப விழிப்புணர்வு நிகழ்ச்சி விழயக்கிழமை (27) நடைபெற்றது.
மண்முனை மேற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் த.நீர்மலராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் கே.விநோதன், கிராமிய நீர் வழங்கல் மற்றும் சுகாதார பிரிவின் பொறியியலாளர் ஏ.எல்எம்.பிர்தௌஸ், சமூகவியலாளர் எம்.எஸ்எம்.சறூக் ஆகியோர் கலந்து கொண்டு இத்திட்டம் தொடர்பான விளக்கங்களை பயனாளிகளுக்கு வழங்கியிருந்தனர்.
நிகழ்வின் இறுதியில் இச்செயற்திட்டத்தினை வெற்றிகரமான முறையில் முன்னெடுப்பது தொடர்பான கலந்துறையாடல் ஒன்றும் இடம் பெற்றது. இதில் பொது சுகாதார உத்தியோகத்தர்கள்; மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு அவர்களது கருத்துக்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.
0 Comments:
Post a Comment