மனிதத்துவத்தை மதிப்போம் எனும், தலைப்பில் சமூக சேவையாளர், அமரர்.சி.மயில்வாகனத்தின் நினைவுச்சுவடுகள் தாங்கிய நூல் வெளியீடு இன்று சனிக்கிழமை (29) கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணமிஷன் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
பேராசிரியர் மா.செல்வராசாவின், தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சமூக சேவையாளர் அமரர்.சி.மயில்வாகனத்தின்; சேவையின் மகத்துவத்தினை பாராட்டி அவரது மனைவிக்கும், பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஓய்வுபெற்ற கொத்தணி அதிபர் ச.சந்திரசேகரத்திற்கும், பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வின் தலைவர்,பேராசிரியர் மா.செல்வராசாவிடமிருந்து பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஓய்வுபெற்ற கொத்தணி அதிபர் ச.சந்திரசேகரம்; முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன், ஆசிரிய வளநிலைய முகாமையாளர் சி.குருபரன், அதிபர்களான, வே.மகேசரெத்தினம், திருமதி.யோ.ஞானப்பிரகாசம், மற்றும், அரச உத்தியோகத்தர்கள், பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment