29 Aug 2015

புகைப்படக்கலை தொடர்பான செயலமர்வு.

SHARE

புகைப்படக்கலை தொடர்பான செயலமர்வொன்று இன்று சனிக்கிழமை (29) மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி எனேர்ஜி ஸ்ரூடியோவில் நடைபெற்றது. மட்டக்களப்பிலிருந்து இயங்கிவரும் வொஸ் ஒவ் மீடியா கற்கைகள் நிறுவகத்தினூடாக இச்செயலமர்வு நடைபெற்றது. இதில் இப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது புகைப்படக்கருவி (கமரா) பற்றிய விளக்கங்கள், புகைப்படக் கருவியின் புதிய தொழில் நுட்பங்கள், லைட் செற்றிங் போன்ற பல விடையங்கள் பற்றி விளக்கமளிக்கப்பட்டதாக வொஸ் ஒவ் மீடியா கற்கைகள் நிறுவகத்தின் உடக இணைப்பாளர் எஸ்.பிரவீனா தெரிவித்தார்.

இச்செயலமர்வின் இறுதில் பங்கு பற்றியவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.






SHARE

Author: verified_user

0 Comments: