1 Jan 2026

மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்கும், கொழும்பிலிருந்து மட்டக்களப்பிக்கும் இடையில் சேவையிலீடுபடும் புகையிரதத்தில் குறைபாடுகள் காணப்படுகின்றன – சிறிநேசன் எம்.பி

SHARE

மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்கும், கொழும்பிலிருந்து மட்டக்களப்பிக்கும் இடையில் சேவையிலீடுபடும் புகையிரதத்தில்  குறைபாடுகள் காணப்படுகின்றன – சிறிநேசன் எம்.பி

மட்டக்களப்பிலிருந்து சேவையிலீடுபட்டு வந்த புகையிரத பெட்டிகள் றொமேனியன் வகையைச் சேர்ந்ததாகும். அந்த புகையிடு சேவையில் 600 பயணிகள் பயணிக்கத்தக்களவு 10 பெட்டிகளை கொண்டமைந்ததாக காணப்பட்டன ஆனால் இப்போது அவை பவர் வகையைச் சேர்ந்த புகையிரதப் பெட்டிகளாக மாற்றப்பட்டிருக்கிறன. அதேவேளை ஏற்கனவே சேவையில் ஈடுபட்ட 10 பெட்டிகளில் 5 பெட்டிகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. இதன்காரணமாக 600 பேர் பயணிக்கத்தக்க சேவையில் ஈடுபட்டு வந்த புகையிரதம் இப்போது 350 பேர் பயணிக்கத்தக்கதாக குறைக்கப்பட்டிருக்கிறது. அதுமாத்திரமில்லாமல் தினமும் 10 லட்சம் ரூபாயை வருவாயாக உழைத்துக் கொண்டிருந்த இந்த மட்டக்களப்பு புகையிரம சேவை தற்போதைய நிலையில் இரண்டில் லெட்சத்திலிருந்து 3 லெட்சம் வரையில்தான் உழைக்கக் கூடியதாக மாற்றப்பட்டிருக்கிறது. 

என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மவாட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். புதன்கிழமை(31.12.2025) இரவு மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் 

கடந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட றொமேனியன் புகையிரத வகையைச் சேர்ந்த புகையிரதப் பெட்டிகளை மீண்டும் சேவைக்கு கொண்டு வரவேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுகின்றார்கள். அவ்வாறு அவற்றை சேவைக்கு கொண்டு வருவதனால் மீண்டும் வழமைபோல் 600 பயணிகள் பயணிக்கத்தக்கதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உறங்கள் இருக்கையாக முதலாம் வகுப்பு இருக்கை, இரண்டாம் வகுப்பு இருக்கை, என்பனவும் அதில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. 

தற்போது இருக்கின்ற பவர்செக் புகையிரத வகையைச் சேர்ந்த 5 புகையிடப்பெட்டிகளில் 350 பயணிகள்தான் பயணிக்கக்கூடிய நிலையில்  காணப்படுகிறது. அதுமாத்திரம்மின்றி தற்போதைய பவர்செக் புகையிரத சேவையை எடுத்துக் கொண்டால் அதில் தபால் சேவையில்லை, பொதிகை சேவை இல்லை, என்பதோடு அங்கு சிற்றுண்டி வசதிகளும் இல்லாமல் உள்ளதனால் பயணிகள் அதிகளவு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். 

மட்டக்களப்பு கொழும்பு, கொழும்பு மட்டக்களப்பு ஆகிய புகையிரத சேவைகள் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு மாத்திரம் இன்றி அம்பாறை மாவட்டத்திலுள்ள மக்களுக்கும் பயனுறுதி வாய்ந்ததாக காணப்படுகிறன. அதுபோல் பொலன்நறுவை மாவட்டத்திலிருந்து அதிகமான பயணிகளை கொண்டு செல்லுகின்ற ஒரு புகையிரத சேவையாகவும் இது காணப்படுகின்றது. புகையிரதம் சார்ந்து அல்லது போக்குவரத்து சாந்து இருக்கின்ற அமைச்சரிடம் இது தொடர்பில் கருத்திற் கொண்டு உடன் செயற்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கின்றேன். 

இந்நிலையில் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் புறப்படுகின்ற புகையிரதம் மாலை 7 மணிக்கு புறப்பட்டு அது மறுநாள் அதிகாலை மட்டக்களப்புக்கு வந்து சேர கூடியதாக இருந்தது. அவ்வாறு அதிகாலை வந்து சேருகின்ற போது அலுவலகங்களுக்கு செல்கின்றவர்களுக்கு அது அனுகூலமாக அமைந்திருந்தது. இப்போது கொழும்பிலிருந்து புறப்படுகின்ற புகையிரதம் இரவு 11 மணிக்கு  புறப்படுகின்றது இதன் காரணமாக மறுநாள் காலை 9.30 மணிக்கு மட்டக்களப்பை வந்தடைகின்றது எனவே இதனால் அலுவலகப் பணிகளுக்கு செல்வர்களுக்கு அசௌகரிகமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்கு சென்று கொழும்பிலிருந்து மீண்டும் மட்டக்களப்புக்கு வருவதற்கு ஒரே நாளில் முடிக்க வேண்டிய பணிகளை இரண்டு நாட்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. 

இதனால் அரச அலுவலர்களும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே தயவு செய்து ஏற்கனவே மட்டக்களப்பிலிருந்து பயன்படுத்தப்பட்ட ருமேணியன் ரக புகையிரத வண்டிச் சேவையை சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டும். அதில் பத்து பெட்டிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும், எனவே புகையிடு போக்குவரத்துக்கு பொறுப்பாக இருக்கின்ற போக்குவரத்து அமைச்சர் விமல் ரத்நாயக்க  இந்த விடயத்தை கருத்தில் கொள்ள வேண்டும். இல்லாது விட்டால் புகையிரத சேவையில் மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள். இப்போது புகையிரத சேவை உத்தியோகஸ்தர்களுக்கும் பயணிகளுக்கும் இடையில் அடிக்கடி குழப்பகரமான சூழல் முரண்பாடுகள் இடம்பெற்று வருகின்றன இதனை தீர்த்து வைக்குமாறு அமைச்சரிடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். 

கடந்த காலத்தில் வடக்கு கிழக்கில் பல்வேறுபட்ட ஆயுத குழுக்களின் தாக்கங்களினால் பல்வேறுபட்ட அப்பாவி மக்கள் கடத்தப்பட்டும் காணாமலாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் இருக்கின்றார்கள். சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்கள். எமக்கு தனிப்பட்ட ரீதியில் எவர் மீதும் ஆத்திரமில்லை ஆக்ரோஷம் இல்லை. ஆனால் வடக்கில் கடத்தல்கள் பல காணாமல்போன சம்பவங்களுக்கு பொறுப்பாக ஈபிடிபி கட்சி இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு வருகின்றன. ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை தொடர்பான விடயத்திலும்சரி, பல்வேறு கடத்தல்களோடு சம்பந்தப்பட்ட கொலை செய்யப்பட்ட விடயங்களிலும்சரி, தினமுரசு பத்திரிகை ஆசிரியர் அற்புதனின் படுகொலையாக இருக்கலாம், கே எஸ் ராஜாவின் படுகொலை, இன்னும் பல படுகொலைகளுக்கு காரணமாக ஈபிடிபி யினர் இருந்ததாக மக்கள் பலர் குற்றச்சாட்டுகின்றார்கள். அதாவது இராஜபக்சவின் ஆட்சிக்காலம் சந்திரிகாவின் ஆட்சிக் காலங்களில் ஈபிடிபி யினர் இவ்வாறு செயற்பட்டதாக குற்றச்சாட்டுகின்றார்கள் எனவே அவை இதுவரையில் வெளிக்கொண்டுவரப்படவில்லை. 

கைது செய்யப்படுகின்றவர்கள் அப்பாவிகளாக இருந்தால் அவர்கள் தப்பிக் கொள்ளலாம் ஆனால் குற்றங்கள் புரிந்திருந்தால் அவர்கள் அந்தப் பாதிக்கப்பட்ட மக்களின் உறவினர்கள் சார்பாக சொல்லிக் கொள்வது யாதெனில் அவர்கள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். ஆகவே கிழக்கில் இருந்து யார் கைது செய்யப்பட்டாலும், வடக்கிலிருந்து யார் கைது செய்யப்பட்டாலும், அவர்கள் கடந்த காலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் சட்ட சட்ட ரீதியாக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் விரும்புகின்றோம். இதனை நாம் பழிவாங்கல் என்று சொல்வதை விட குற்றத்திற்குரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் அவர்கள் நிரபராதியாக இருந்தால் விடுதலை ஆக்குவார்கள். 

வெற்றி எதிர்க்கட்சிகள் சார்பாக பழிவாங்கல் என்று சொல்வதை நாங்கள் விரும்பவில்லை கிழக்கில் பல கடத்தல்கள் படுகொலைகள்களுக்கும் காரணமாக இருந்தவர்கள் யார் என்பதை எங்களுக்கு தெரியும் அவர்களை நாங்கள் பழிவாங்குவதாக நாங்கள் கருதவில்லை விசாரணை செய்யப்பட்டு உரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் எமது நிலைப்பாடு. 

இப்போது இருக்கின்ற தேசிய மக்கள் சக்தியானது செய்கின்ற சில விடயங்கள் தமிழ் பேசுகின்ற மக்களுக்கு சில குறைபாடுகள் இருப்பதாக அவதானிக்க முடிகின்றது தொல்லியல் திணைக்களத்தின் செயல்பாடு இப்போது தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கின்றன. பௌத்தர்கள் சிங்களவர்கள் வாழாத இடங்களில் விகாரைகளை நிறுவுகின்ற செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. தையிட்டியில்; எந்த பௌத்தர்களும் இல்லாத இடத்தில் அங்கு திஸ்ஸ விகாரை நிறுவப்பட்டிருக்கிறது. அது சட்டவிரோதமான விகாரை இவ்வாறு சட்டவிரோதமாக தனியார் காணியில் அமைக்கப்பட்ட விகாரையை அகற்ற வேண்டும் என மக்கள் கூறுவது எந்த விதமான தவறும் இல்லை. 

கடந்த காலத்தில் இவ்வாறு சட்ட விரோதமாக பலவந்தமாக சண்டித்தனமாக விகாரை கட்டப்பட்டிருந்தது. எனவே அந்த விகாரையை இன்று சட்டவாசியை பின்பற்றுகின்றவர்கள் என சொல்கின்றவர்கள் அதனை அகற்ற வேண்டும். என மக்கள் கேட்பது நியாயம் இருக்கின்றது. இந்த நிலையில் எமது வேலன் சுவாமி அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் என போராடி வருகின்றார்கள். அமைதியாக போராடுகின்ற போது அடக்குமுறை பயன்படுத்தப்படுகிறார்கள். ஆனால் பௌத்த தேரர்களை பொறுத்தவரையில் பௌத்தப்பிக்குகள் அடாவடித்தனமாக நடந்து கொள்ளுகின்ற போது பொலிசார் அமைதி காத்திருக்கிறார்கள்.

 

அண்மையில் திருகோணமலையில் புத்தர் சிலையை பிரதிஷ்டை செய்ய முற்பட்டபோது பொலிசார் ஆரம்பத்தில் தடுத்தனர் அப்போது பொலிசாரின் கன்னத்தில் அறைந்த பிக்குவும் இருக்கின்றார். அவ்வாறானவர்களுக்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆனால் வேலன சுவாமி ஒரு இந்துவாக இருக்கின்ற போது அவர் பாதிக்கப்படுகின்றார். எனவே தமிழ் மக்களும் தங்கள் பக்கமாக பல தாக்கங்கள் நடைபெறுவதை உணர்கின்றார்கள். 

பிராஜா சக்தி அமைப்பிலும்கூட மக்களால் தெரிவு செய்யப்பட்ட  பிரதிநிதிகள் இருக்கத்தக்க, மக்கள் மூலமாக தேர்தலில் தோற்கடிக்கப்பட்டவர்களும் தலைவர்களாக அங்கு நிறுத்தப்படுகின்ற நிலைமை காணப்படுகிறது .ஊழல் மோசடிக்கு எதிரான செயற்பாடுகள் பாதாள உலகம் கோஷ்டிக்குகளுக்கு எதிரான செயற்பாடுகளை, நாங்கள் பாராட்டி கொண்டு குறைபாடுகளை, குற்றச் செயல்களை அல்லது மக்களுக்கு எதிரான விரோத செயல்களை கண்டும் காணாதது போல் நாம் இருக்க முடியாது. தேசிய மக்கள் சக்தியினர் செயற்படுத்துகின்ற விடயங்களை தமிழ் பேசுகின்ற இனத்திற்கு எதிராக இருக்கின்ற பட்சத்தில் அவற்றை சுட்டிக்காட்டவும் அல்லது அவற்றை மாற்றியமைக்கவும் அதற்கான வழிகளைத் கூறவும்; நாங்கள் உண்மையில் துணிந்து செயல்படுவோம் என அவர் இதன்போது தெரிவித்தார்.

 

 



 

 

SHARE

Author: verified_user

0 Comments: