முதலைகளின் நடமாட்டம் அதிகரிப்பு.
வடகீழ் பருவப் பெயற்சி மழை வீழ்ச்சி தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் சற்று ஓய்ந்துள்ள நிலமையை அவதானிக்க முடிகின்றது. எனினும் ஏற்கனவே பெய்த மழைவீழ்ச்சியினால் மட்டக்களப்பு வாவியை அண்மித்துள்ள களுதாவளை, களுவாஞ்சிகுடி, தேற்றாத்தீவு. மகிளுர், உள்ளிட்ட பல கிராமியக் குளங்கள் நிரம்பியுள்ளன.
இந்நிலையில் மட்டக்களப்பு வாவியிலுள்ள
முதலைகள் கிராமியக் குளங்களுக்குள் வந்துள்ளன. இவ்வாறு குளங்களில் இருக்கும் முதலைகளில்
இரவு வேளைகளில் வீதிகளில் நடமாடுவதை அவதானிக்க முடிகின்றது.
எனவே இரவு வேளைகளில் அப்பகுதிகளில் நடமாடுபவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இது இவ்வாறு இருக்க களுதாவளைப் பகுதியில் செல்வாய் கிழமை இரவு பாரிய முதலை ஒன்று பிரதான வீதியை ஊடறுத்து கடந்து செல்வதையும், மற்றுமொரு முதலை வீதிக்கு வந்துள்ளதையும் அவதானிக்க முடிந்தது.
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
0 Comments:
Post a Comment