நல்லின எருமைப் பசுக்கள் வளர்ப்பது தொடர்பிலான தொழில் நுட்ப பயிற்சி நெறியொன்று வியாழக் கிழமை (27) போரதீவுப்பற்றுப் பிரதேச நால் நடை பண்ணையாளர்களுக்கு வழங்கப்பட்டது.
போரதீவுப்பற்று பிரதேச மட்டுப் படுத்தப்பட்ட கால்நடை அபிவிருத்திச் சங்கத்தினால், உலக தரிசன நிறுவனத்தின் ஆனுசரணையில் நடாத்தப்பட்ட இப்பயிற்சிநெறி, தும்பங்;கேணியில் அமைந்துள்ள உலக தரிசன நிறுவனத்தின் காரியலயத்தில் நடைபெற்றது.
இதன்போது வளவாளராக்க கலந்து கொண்ட தும்பங்கேணிப் பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி சி.துஷியந்தன் விளக்கமளித்தார்.
இதில் போரதீவுப்பற்று பிரசேத்திலிருந்து தெரிவு செய்ய்பட்பட 37 கால் நடை பண்ணையார்கள் கலந்து கொணடதாகவும், இப்பயிற்சிநெயியை பூர்தி செய்த பயனாளிகளுக்கு, அடுத்த மாதம் தலா ஒரு லெட்சம் ரூபாய் பெறுமதியான நல்லின எருமைப் பசுக்கள’ உலக தரிசன நிறுவனத்தின் அனுசரணையில் மானியமாக ஒவ்வொன்று வழங்கப் படவுள்ளதாகவும். போரதீவுப்பற்று பிரதேச மட்டுப் படுத்தப்பட்ட கால்நடை அபிவிருத்திச் சங்கத்தின் பொது முகாமையாளர் எஸ்.தமயந்தி தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment