31 Aug 2015

கால் நடை வளர்ப்பாளர்களுக்கு அனர்த முன்னாயர்த்தம் தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு.

SHARE

 மட்டக்களப்பு மாவட்டம் போதீவுப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த கால் நடை வளர்ப்பாளர்களுக்கு அனர்த முன்னாயர்த்தம் தொடர்hபன விழிப்புணர்வுச் செயலமர்வொன்று திங்கட் கிழமை (31) தும்பங்கேணியில் அமைந்துள்ள கால்நடை அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது.

போரதீவுப்பற்று பிரதேச மட்டுப் படுத்தப்பட்ட கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் தெ.சிவபாதம் தலைமையில் டைபெற்ற இந்நிகழ்வில், போரதீவுப்பற்று பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 25 கால்நடை வளர்ப்பாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அக்ரெட் மற்றும், உலகதரிசன நிறுவனங்களின் அனுசரணையில் நடைபெற்ற விழிப்புணர்வுச் செயலமர்வில் அனர்த முகாமைத்துவ பயிற்று விப்பாளர் செ.ரமேஸ்வரன் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினார்.

வெள்ள அனர்த காலங்களிலும், ஏனைய இடர் நிலை காலங்களிலும் ஆடு, மாடு, மற்றும் கோழிகள் போற்றவற்றை, எவ்வாறு பாதுகாத்தல், மின்னல் தாக்கங்களிலிருந்து எவ்வாறு பாதுகாத்தல், அனர்தங்களை எதிர் கொள்ளக் கூடிய வகையில் எவ்வாறு முற்கூட்டியே தயார் செய்திருத்தல் போன்ற பல விடையங்கள் தொடர்பில் இதன்போது கலந்து கொண்ட கால் நடை வளர்ப்பாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதாக, போரதீவுப்பற்று பிரதேச மட்டுப்படுத்தப்பட்ட கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தின் பொது முகாமையாளர் ச.தமயந்தி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அக்ரெட் நிறுவனத்தின் திட்டஇணைப்பாளர், கஜேந்திரன் மற்றும், போரதீவுப்பற்று பிரதேச மட்டுப் படுத்தப்பட்ட கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தின் நிருவாகிகள், உள்ளிட்ட பலர் கலந்த கொண்டிருந்தனர்.











SHARE

Author: verified_user

0 Comments: