31 Aug 2015

கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் குடும்பிமலைக் குளக்கட்டு புனரமைப்புப் பணிகளை நேரில் சென்று பார்வை...

SHARE

மட்டக்களப்பு குடும்பிமலை ஆத்திக்காடு குளக்கட்டு மற்றும் வாய்க்கால் புனரமைப்பு செயற்பாடுகளை பார்வையிடுவதற்கு நேற்று கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் குடும்பிமலைப் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

மத்திய அரசின் விவசாய திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற இப்புனரமைப்பு பணி தொடர்பில் மக்கள் தங்கள் குறைபாடுகளைத் தெரிவித்ததன பேரில் அமைச்சர் நேரில் சென்று அதனைப் பார்வையிட்டார். அத்துடன் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி இது தொடர்பில் எதிர்வரும் வாரத்தில் அவ் அதிகாரிகளை இச்செயற்திட்டம் தொடர்பாக கண்காணித்து அப்பிரதேச கமநல அமைப்பினருடன் கலந்துரையாடி உரிய வகையில் இதனை மக்கள் பயன்பாட்டிற்கு உகந்ததாக மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.









SHARE

Author: verified_user

0 Comments: