மட்டக்களப்பு மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டு குடிநீர்த் தட்டுப்பாடுகள் நிலவும் பகுதிகளுக்கு கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்டு அப்பிரதேசங்களின் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர்கள் மற்றும் பிரதேசவாசிகளுடன் கலந்துரையாடினார்.
மட்டக்களப்பு மேற்கு பிரதேச சபைக்குரிய பருத்திச் சேனை, உன்னிச்சை, 08ம் கட்டை ஆகிய பிரதேசங்களுக்கே அவர் விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இப்பிரதேச மக்களுக்கு, பிரதேச சபையினால், குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப் படுவதில்லை, குறிப்பிட்ட பல இடங்களில் நீர்த்தாங்கிகள் இல்லை என்ற குறைபாடுகளை அப்பகுதி மக்கள், அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.
குறித்த பிரதேச சபையின் செயலாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குடிநீர் தொடர்பான விடயங்களைத் துரிதப்படுத்துவதற்குரிய பணிப்புரை விடுத்தார்.
0 Comments:
Post a Comment