மூவினங்களும் வாழ்ந்துவருகின்ற அம்பாறை மாவட்டத்தை ஏனைய மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக, சமாதான வலயமாக கட்டியெழுப்பி இன நல்லுறவை பிரதிபலிக்கும் ஒரு மாவட்டமாக மாற்றி அமைப்பதற்கான தனது முயற்சிக்கு மக்கள் அங்கிகாரம் அளித்துள்ளமையையிட்டு மகிழ்ச்சி அடைவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் அதிக விருப்பு வாக்குகளை பெற்று வெற்றி பெற்றவருமான தயாகமகே தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மூவின மக்களும் மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளினால் என்னை வெற்றி பெறச் செய்தமையை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்' என்றார்.
மேலும், அபிவிருத்தி அடைந்த நகரங்களைப் போன்று அனைத்து வசதிகளையும் கொண்டதாக அம்பாறை மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய எமது அரசாங்கத்தை பயன்படுத்துவேன். ஒலுவில் துறைமுகத்தை மீளப் புனரமைத்து செயற்பாடு மிக்கதாக மாற்றி இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதியின் உதவியுடன் முன்னெடுக்கவுள்ளேன்.
எதிர்வரும் இரண்டு வருடங்களினுள் அம்பாறை மாவட்டத்தில் அனைவருக்குமான மின்சாரம் மற்றும் குடிநீர் வசதிகளையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளேன்' எனவும் அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment