திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் தனிமையில் இருந்த பெண்ணிடம் சேஷ்ட்டை செய்த சந்தேக நபரை செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு; கந்தளாய் நீதவான் நீதிமன்ற நீதிபதி ருவன் திஸாநாயக்க இன்று வியாழக்கிழமை(20) உத்தரவிட்டார்.
குறித்த சந்தேக நபர், கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீனிக்கம்மானைக் கிராமத்தில் தனிமையில் இருந்த பெண்ணிடம் சேட்டைசெய்ததோடு, அவரின் கையைப் பிடித்து இழுத்ததாகவும் அந்தப் பெண் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபரைக் கைது செய்த பொலிஸார், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment