20 Aug 2015

இந்தியப் பிரஜைகள் இருவருக்கு பிணை

SHARE

வியாபார நோக்கத்துடன் நடமாடினார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இந்தியப் பிரஜைகள் இருவரையும்; தலா 25,000 ரூபாய் படி ஆட்பிணையில் செல்வதற்கு வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி ஏ.எல்.முனாஸ் நேற்று வியாழக்கிழமை அனுமதி அளித்துள்ளார்.
   
அத்துடன், இவர்களை மீண்டும் 24.9.2015 அன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு  நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வியாபார நோக்கத்துடன் நடமாடினார்கள் என்ற  சந்தேகத்தின் அடிப்படையில் இந்தியப் பிரஜைகள் இருவரும் தியாவட்டவான் பிரதேசத்தில் புதன்கிழமை (19) இரவு கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனையிலிருந்து வாகரை நோக்கி முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்தபோதே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.  

SHARE

Author: verified_user

0 Comments: