20 Aug 2015

தெருநாய்க்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள்.

SHARE


மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிகுடி, களுதாவளை, போன்ற பகுதிகளில் தெருநாய்க்களின் தொல்லை அதிகரித்து வருகின்றன. 

இப்பகுதிகளில் திரியும் தெருநாய்க்களைக் கட்டுப்படுத்த மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை, களூவஞ்சிகுடி, பொலிசார், களுவாஞ்சிகுடி, பொதுசுகாதார பகுதியினர், போன்ற அரச அமைப்புக்கள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிவாழ் பொதுமக்களும், பிரயாணிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாய்கள் கட்டாக்காலியாக வீதிகளில் திரிவதகால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும், இதனால் பிரயாணிகளுக்கும் பொதுமக்களும் பலத்த அசௌகரியங்களை எதிர் கொள்ள நேரிடுவதாகவும், பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடையத்தைக் கருத்தில் கொண்டு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் திரியும் தெருநாய்க்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு அப்பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.



SHARE

Author: verified_user

0 Comments: