20 Aug 2015

ஆடுகளுடன் இருவர் கைது

SHARE
அனுமதிப்பத்திரமின்றி வாகனம்; ஒன்றில் 24 ஆடுகளை ஏற்றிக்கொண்டு சென்றதாகக் கூறப்படும் இரண்டு பேரை திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்  வியாழக்கிழமை பொலிஸார்  கைதுசெய்ததுடன், அந்த ஆடுகளையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

 தோப்பூரிலிருந்து கொழும்புக்கு இந்த ஆடுகளை கொண்டு சென்றுகொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். வாகன சாரதி மற்றும் அவரின் உதவியாளருமே இதன்போது கைதுசெய்யப்பட்டனர்.
 இவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.
SHARE

Author: verified_user

0 Comments: