ஒன்பதினாயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான
வேலைத்திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படுத்தப்பட்டன – பிரபு எம்.பி.
ஒன்பதினாயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான வேலைத்திட்டங்களை நாம் இந்த மாவட்டத்தில் செயல்படுத்தி இருக்கின்றோம். தேசிய மக்கள் சக்தியின் கன்னி வரவு செலவு திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கென அதிகமான தொகை நிதியை ஒதுக்கீடு செய்து அதனை நாம் நிவர்த்தி செய்து காட்டி இருக்கின்றோம்.
என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
புது வருடம் பிறந்துள்ள இன்றய முதல் நாளிலே(01.01.2026) போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சங்கர்புரம் கிராமத்தில் 24 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் வீதிப் புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்துவிட்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்..
எமது அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டிருந்த கிராமிய வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இதுவரையில் 13 பிரதேச செயலாளர் பிரிவுகளில் நாம் முன்னெடுத்து இருந்தோம். அதிலே போரதீவுப் பற்றுப் பிரதேச செயலகத்துக்கான வேலை திட்டம் இந்த வருடத்தின் முதல் நாளிலேயே நாம் இன்றைய தினம் ஆரம்பித்து வைத்திருக்கின்றோம்.
800 மீட்டர் நீளம் கொண்ட இந்த வீதி 24 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட உள்ளது. இப்பிரதேசத்தில் மாத்திரம் இன்றி மட்டக்களப்பு மாவட்டம் பூராகவும் பல மில்லியன் ரூபா பெறுமதியான வேலைத்திட்டங்களை செயல்படுத்தி நாம் செயற்படுத்தி அதனை நிறைவு செய்து இருக்கின்றோம்.
ஒன்பதினாயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான வேலைத்திட்டங்களை நாம் இந்த மாவட்டத்தில் செயல்படுத்தி இருக்கின்றோம். தேசிய மக்கள் சக்தியின் கன்னி வரவு செலவு திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கென அதிகமான தொகை நிதியை ஒதுக்கீடு செய்து அதனை நாம் நிவர்த்தி செய்து காட்டி இருக்கின்றோம். அது போன்று இவ்வருடமும் 2026 ஆம் ஆண்டும் இதே போன்ற பல வித திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகளையும் நாம் அரசாங்கம் என்ற ரீதியிலே ஜனாதிபதி அவர்களின் வரவு செலவு திட்ட வாசிப்பிலே அதிகூடிய விடயங்களை ஏற்படுத்தியிருக்கின்றார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலே அதிக தேவையாக இருக்கின்ற விடயங்களை அடையாளம் கண்டு அதற்கான விசேட நிதி ஒதுக்கீடுகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. அண்மையில் ஏற்பட்ட சூறாவளியின் காரணமாக அபிவிருத்தி வேலை திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. அதன் காரணமாக வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியாமல் நிலைமை ஏற்பட்டிருந்தது. இப்பகுதியிலும் வெள்ளத்தினால் பல வீதிகள் சேதமாக்கப்பட்டிருந்ததை நானும் இப்பகுதி பிரதேச செயலாளர்கள் இணைந்து நேரடியாக சென்று பார்வையிட்டு இருந்தோம். அது தொடர்பான மதிப்பீட்டு அறிக்கைகளை பிரதேச சபைகள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு அரசாங்கத்திடம் குறித்த வேலைத்திட்டங்களை செயல்படுத்தக்கூடிய திணைக்களங்களுக்கும் அமைச்சுக்களுக்கும் வழங்கி இருக்கின்றோம். எதிர்வரும் காலங்களில் அத்திட்டங்களுக்குரிய நிதிகளையும் ஒதுக்கீடு செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். என அவர் இதன்போது தெரிவித்தார்.
இதன்போத போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பணிப்பார் எஸ்.அத்தநாயக்க உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
0 Comments:
Post a Comment