கடந்த 98 ஆண்டுகளாக லயன்ஸ் சர்வதேச கழகம் உலகிகலுள்ள பலதரப்பட்ட மக்களுக்கு, சாதி, மத, வேறுபாடுகளின்றி சோவை செய்து வருகின்றது. உலகில் சேவை செய்து வரும் பல அமைப்புக்களில் லயன்ஸ சர்வதேச கழகம் மிகப்பெரியதாக அமைந்துள்ளது. 1.35 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்டு 46000 கழகங்களுடாக 206 நாடுகளிலில் தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. இன்னும் 2 வருடங்களில் 100வது வருடத்தை எட்டவிருக்கும் லயன்ஸ சர்வதேசக் கழகம், 4 செயற்பாட்டுத் திட்ங்களை அமுல்ப் படுத்தும் முகமாக, செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
என லயன்ஸ் கழகத்தின் வத்தளை கிளசிக் லயனின் சுயதொழில் வேலைவாய்ப்பு செயற்பாட்டுக்குழு தலைவர், லயன் செல்வரெத்தினம் நிமால் தெரிவித்தார்.
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள விவேகானந்தா, தொழில் நுட்பக் கல்லூரியில் தையல் பயிற்சியை நிறைவுசெய்து, முதல் மூன்று இடங்களையும் பெற்றுக் கொண்டவர்களுக்கு, இலவசமாக தையல் இயந்திரங்களை லயன்ஸ் கழகத்தினூடாக வழங்கி வைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (02) விவேகானந்தா, தொழில் நுட்பக் கல்லூரி மண்டபத்தில்,நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்….
பசியைப் போக்குதல், இளைஞர்களின் எதிர்காலத்தை உருவாக்குதல், சுற்றாடலைப் பாதுகாத்தல், கண்பார்வையற்றவர்களுக்குச் சிகிச்சசையழித்தல் போன்ற 4 செயற்பாகளையும், முன்நிறுத்தி 100 வருடத்தை நோக்கி லயன்ஸ் சர்வதேச கழகம், செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
வேலைவாய்ப்பின்னையினால்தான் பசி என்கின்ற பதம் உருவாகியது. ஐக்கிய நாடுகளின் தரவுகளின் படி உலகத்தில் வாழும் மக்களில் 812 மில்லியன் மக்கள், இரவு உறக்கத்திற்குச் செல்லும்போது பசியுடன் செல்கின்றார்கள். எனத் தெரிவிக்கப் படுகின்றது. இதிலிருந்து வறுமையின் கொடுமை எந்தளவிலுள்ளது என்பதை எம்மால் உணரக் கூடியதாகவுள்ளது.
எமது கழகம் அவுஸ்ரேலியாவிலுள்ள இப்பீங் ஈஸ்ட்பூட் கழகத்துடன் இணைந்து, இலங்கையில் லேலையில்லாப் பிரச்சனையைக் குறைப்பதற்கான, செயற்றிட்டங்கைள வகைப்படுத்தியுள்ளோம். என அவர் தெரிவித்தார்.
சமூக நலன்புரி அமைப்பின் தலைவர் எஸ்.திருநாவுக்கரசின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சமூக நலன்புரி அமைப்பின் திட்ட அபிவிருத்தி ஆலோசகர் எம்.புஸ்பராஜன், பணிப்பாளர்.க.பிரதீஸ்வரன், இணைப்பாளர் க.விக்னேஸ்வரன், லயன் கழகத்தின், வத்தளை கிளசிக் லயன் தலைவர், லயன் டாக்கடர் சு.மகேஸ்வரி, கழக செயற்பாட்டுத் தலைவர் லயன் ஜெயப்பிரகாஸ் ஜோன் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment