8 Aug 2015

நல்லாட்சியை வலுப்படுத்தவே வந்துள்ளோம்

SHARE
இப்பொழுது நல்லாட்சி நடைபெறுகின்றது. இதனை வலுப்படுத்தவே நாங்கள் முன்வந்திருக்கின்றோம்' இவ்வாறு ஜனநாயகக் கட்சியின் தேசியத் தலைவரும் வேட்பாளருமான  பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

 திருகோணமலை மாவட்ட ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து கிண்ணியா நகரசபை மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். 


இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'ஜனநாயகக் கட்சி இந்த தேர்தலேயே போட்டியிடுகின்றது. கிழக்கு மாகாணத்தில் இதுவே முதற்தடவையாக களம் இறங்கியிருக்கின்றது. உண்மையில் அனைத்து பிரதேசங்களிலும் ஒரே விதமாக அபிவிருத்தி அடைந்து பொருளாதாரத்தை  நிலைகொள்ள வேண்டும். நான் இந்த இடத்திலிருந்து பார்க்கின்றபோது இந்த மக்களுக்கு நிறைய பிரச்சினைகள் இருக்கின்றதை அறியமுடிகின்றது' என்றார்.
SHARE

Author: verified_user

0 Comments: