10 Aug 2015

விபத்தில் கணவன், மனைவி படுகாயம்

SHARE
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் பாண்டிருப்பு பகுதியில் இன்று திங்கட்கிழமை (10) பிற்பகல் 2.15 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்;தில் கணவன், மனைவி படுகாயமடைந்துள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர். 

மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த வங்கியொன்றுக்கு சொந்தமான வான், கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதினாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர். 

இதன்போது முச்சக்கரவண்டி தலைகீழாக குடைசாய்ந்ததில், முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற கணவனும் அதில் பயணம் செய்த மனைவியும் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.  பாண்டிருப்பு, சர்வோதய வீதியைச் சேர்ந்த கந்தையா வைரமுத்து மற்றும் அவருடைய மனைவி திருமதி கே.வைரமுத்து ஆகிய இருவருமே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.  இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
SHARE

Author: verified_user

0 Comments: