நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் சந்திரகாந்தனுக்கு ஆதரவு வழங்க இலங்கை இளைஞர் அபிவிருத்தி ஒன்றியம் முன்வந்துள்ளது.
நேற்று 11.08.2015 சந்திரகாந்தனைச் சந்தித்த இளைஞர் அபிவிருத்தி ஒன்றியத்தினர் முற்று முழுதாக ஆதரவு வழங்குவதாகவும் தங்களது அமைப்பில் 4632 பேர் இருப்பதாகவும் அனைவரும் ஒருமித்து இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும். சந்திரகாந்தனின் வெற்றிக்காக உழைக்கப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
முஸ்லிம் முதலமைச்சர் வந்ததன் பின்னர் தமிழர்கள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டதுடன் தொழில்வாய்ப்பிலும் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டனர். எதிர்வரும் காலங்களில் தமிழ் சமூகம் முன்னேற்றப்பாதை நோக்கி செல்லவேண்டுமாக இருந்தால் எமது தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புக்கள் கிடைக்க வேண்டுமாக இருந்தால் கடந்த காலத்தில் கிழக்கு மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து சேவையாற்றிக்கொண்டிருக்கும் சந்திரகாந்தனுக்கே தமிழ் மக்கள் வாக்களிக்கவேண்டும் எனவும் கேட்டுள்ளனர்
0 Comments:
Post a Comment