12 Aug 2015

அபிவிருத்தி என்பது தனி மனிதனிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் - கணேசமூர்த்தி.

SHARE

அபிவிருத்தி என்பது தனி மநிதனிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அது கிராமம், பிரதேசம், மாட்டம் தழுவி முழு நாடே அபிவிருத்தியை நோக்கிச் செல்லும். இவ்வாறான அபிலாசைகளையும், அபிவிருத்தி மேலலைத் திட்டங்கைளயும், தனி நபர் முதல் நாடு தழுவி ரீதியில் முன்நோக்கிக் கொண்டு செல்லக் கூடிய தலைவர்களை எதிர் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.

என முன்னாள் பிரதியமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருமான  சோமசுந்தரம் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – பழுகாமத்தில் அவரது தேர்தல் பிரச்சாரக் காரியாலயம் ஒன்றைத் திறந்து வைத்து விட்டு ஆதரவாளர் மத்தியில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்… 

எதிர் வரும் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலானது மிகவும் முக்கியம் வாய்ந்த தேர்தலாகும். இந்த தேர்தலின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ஆளும் கட்சி சார்பாக தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டும். அவ்வாறு தெரிவு செய்யப்படுபவரும், அனுபவமிக்க, ஆற்றலுடைய மக்களின் மத்தியில் சேவையாற்றக்கூடியவராகவும் அமைய வேண்டும். எனவே இவைகளனைத்தையும், சிந்தித்து எமது மக்கள் எதிர்வருகின்ற தேர்தலில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

கடந்த காலத்தில் இந்த மாவட்டத்தில் நான் பிரதியமைச்சராகவிருத்து பல அபிவிருத்திகளை மேற்கொண்டிருந்தேன் அதனை இம்மாவட்ட மக்கள் நன்கறிவார்கள். அதுபோல் எதிர் வருகின்ற தேர்தலின் மூலம் எனக்கு ஒரு சந்தர்ப்பம் எமது மக்கள் வழங்குவார்கள் அதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய அபிவிருத்திகளையும், தொழிற் பேட்டைகளையும், மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளேன்.

எமது இளைஞர் யுவதிகள் இங்கு தொழில் வாய்பிம்மையினால் மத்திய கிழக்கு நாடுகளில் கையேந்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் பல துறைசார் தொழிற் பேட்டைகளை நிறுவப்படும் பட்சத்தில் இங்குள்ள இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பின்மை என்ற பிரச்சனைகளுக்கு முன்றுப்புள்ளி வைக்கப்படும்.

எனவே இவைகளனைத்திற்கும் தீர்வு கிடைக்க வேண்டுமாக இருந்தால் எமது மக்கள் எதிர் வருகின்ற தேர்தலில் எம்மை அமோக வாக்குகளால் வெற்றியடையச் செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.






SHARE

Author: verified_user

0 Comments: